Monday, June 4, 2012

சமையலை சுலபமாக்கும் டிப்ஸ்

1 கப் பருப்புக் கலவைக்கு, அரை கப் அரிசி, காய்ந்த மிளகாய், தேவைக்கேத்த உப்பு சேர்த்து, அப்படியே மிஷின்ல கொடுத்து நைஸ் ரவையா அரைச்சு,
சலிக்காம ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். தேவைப்படறப்ப, கொஞ்சம் எடுத்து, தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வச்சு, அடை செய்யலாம். ரவா இட்லி, ரவா தோசை மிக்ஸ்களையும் இந்த மாதிரி செய்து வச்சுக்கலாம்.

 கடைகள்ல கிடைக்கிற இஞ்சி-பூண்டு விழுதுல வினிகர் சேர்ப்பாங்க. சம அளவு இஞ்சி, பூண்டு சேர்த்து நாமே அரைச்சு, ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கிட்டா ஒன்றரை மாசம் வரைக்கும் உபயோகிக்கலாம்.

 வெங்காய விழுதையும், இஞ்சி-பூண்டு விழுதையும் எண்ணெய் விட்டு நல்லா வதக்கி, ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கலாம். தேவைப்படறப்ப கடாய்ல கொஞ்சம் எண்ணெய் விட்டு, இந்த விழுது சேர்த்து, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு போட்டு, வேக வச்ச சன்னா சேர்த்தா, இன்ஸ்டன்ட் சன்னா மசாலா ரெடி.

 சப்பாத்தி மாவைப் பிசைஞ்சு, கிளிங் ஃபிலிம்ல சுத்தி ஃப்ரிட்ஜ்ல வச்சா, நாலஞ்சு நாளைக்கு அப்படியே இருக்கும். அதையே சப்பாத்தியா இட்டு, அரை வேக்காடு வேக வச்சு, ஒவ்வொரு சப்பாத்திக்கு இடைலயும் பட்டர் பேப்பர் வச்சும் பத்திரப்படுத்தலாம். தேவைப்படறப்ப எடுத்து வாட்டி சாப்பிடலாம்.

 பழைய புளி, புதுப்புளி சம அளவு எடுத்து 1 டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, பிரஷர் குக்கர்ல வச்சு எடுத்து, அரைச்சு, ஆற வச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கிட்டா, புளி பேஸ்ட் ரெடி. புளி கரைக்கிற டென்ஷன் இல்லாம, இதை அப்படியே உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment