சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை பராமரிப்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். வியர்வை, வெயிலில் செல்வதால் கூந்தல் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. பலருக்கும் முடி கொட்டுகிறது. இளநரையாலும் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட லேடீசா நீங்கள். இதோ உங்களுக்காக கூந்தலை எப்படி பராமரிப்பது என்பது பற்றி சில டிப்ஸ்:
முடி உதிர்வதை தடுக்க 50 கிராம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் அயோடின் உப்பு 2 தேக்கரண்டி கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் மூங்கில் இலைகளை சேர்த்து 14 நாட்கள் ஊற வைத்து பின்னர் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.
நல்லெண்ணை 1 லிட்டர் எடுத்துக் கொண்டு அதனுடன் நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் எடுத்து நெல்லிக்காயில் இருக்கும் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்திற்கு 2 நாட்கள் தலையில் தேய்த்தால் இளநரையை நீக்கலாம்.
எண்ணெய் பசை கூந்தலாக இருந்தால் அதற்கு வினிகருடன் எலுமிச்சை சாறை ஊற்றி தலையில் முதல்நாள் இரவே தடவி மெல்லிய வெள்ளைத் துணியை கட்டி மறுநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை குறையும். பேன் இருந்தால் நீங்கி விடும்.
நெல்லிக்காய், கடுக்காய் ஆகியவற்றை தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முடிவளர்வதோடு மயிர் கால்கள் நன்கு வலுவடையும்.
வெல்லம், பீட்ருட், நாவல்பழம், சுண்டைக்காய், முருங்கைகீரை, முட்டை, பேரிச்சம்பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் இளநரையைத் தடுக்கலாம்.
பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதுடன், தலைமுடி உறுதியடையும்.
வசம்பை பொடியாக்கி நீரில் போட்டு குழைத்து இரவில் தூங்கும் முன் தலையில் தேய்த்து மறுநாள் குளித்து வர பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சீதாப் பழக்கொட்டை 2 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பேன் வருவதை தடுக்கலாம்.
அப்புறம் என்னங்க உங்க கூந்தலை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்க இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க...

No comments:
Post a Comment