Monday, May 28, 2012

உடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை !

சித்த மருத்துவத்தில் மிகபெரிய நோய்கள் முதல் சாதாரண நோய்கள் வரைக்கும் தீர்வதற்கு பல சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகத்திய மாமுனிகள் அவர் தமது நூல்களில் இத்தகைய பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்


கொத்தமல்லி விதை அதாவது தனியா 200 கிராம் சீனா கற்கண்டு 400 கிராம் சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம் காட்டு சீரகம் சன்ன லவங்க பட்டை, கருவாய் பட்டை போன்றவைகள் தலைக்கு 30 கிராம் எடுத்து கொள்ளுங்கள் இவற்றில் சீனா கற்கண்டு தவிர மற்றவற்றை உரலில் போட்டு இடித்து கதர் துணியில் சலித்து கொள்ளுங்கள் பிறகு சீனா கற்கண்டையும் பொடி செய்து முதலில் இடித்த மூலிகை பொருள்களோடு கலந்து வைத்து கொள்ளுங்கள் பிறகு காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வென்னீர் குடித்து வாருங்கள் அதிகபட்சமாக 90 நாட்களில் உங்கள் வியாதி முற்றிலும் விலகி விடும். இது வைத்திய முறை மட்டுமல்ல ஜோதிட ரீதியாக குறைவாக இருக்கும் கிரகத்தின் ஆகர்சனத்தை அதிகபடுத்தி தரும் ரகசிய முறையும் ஆகும். 

No comments:

Post a Comment