வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.
Thursday, May 31, 2012
கரிசலாங்கண்ணி கீரை,மூலநோய்,பித்தவாயு,கபம்
வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.
அகத்திக்கீரை
வைட்டமின்,
இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும்.
கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை
வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது
உண்ணத்தக்கது.
Labels:
அகத்திக்கீரை,
கண் பிரச்சினைகள்,
விஷம் முறிக்கும்
முளைக்கீரை:கீரை மருத்துவம்
எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
வெந்தியக்கீரை:கீரை மருத்துவம்
வாயுவைக்
கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின்
சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு
போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.
பசளைக்கீரை:கீரை மருத்துவம்
மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
மணத்தக்காளி: கீரை மருத்துவம்
வாய்ப்புண்,
வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி
கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2
முறை உண்ணத்தக்கது.
கீரை மருத்துவம்-அரைக்கீரை:
விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும்
என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து
கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள்
முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:
அரைக்கீரை:
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
அரைக்கீரை:
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
வெள்ளரிக்காய் மருத்துவம்
Labels:
ஈரல்,
கல்லீரல் பிரச்சினை,
சரும நோய்கள்,
செரிமானம்,
பசி,
வெள்ளரிக்காய்
ஆமணக்கின் மருத்துவ குணங்கள் -சளித்தொல்லை,பால் சுரக்க,காமாலை நோய்,மலச்சிக்கல், வயிற்றுவலி,மூலக்கடுப்பு, கீழ்வாதம், சிறுநீர்ப்பை வலி

Labels:
ஆமணக்கு,
காமாலை நோய்,
சளித்தொல்லை,
நீரிழிவு நோய்,
பால் சுரக்க,
மலச்சிக்கல்
நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்

Labels:
அத்திக்காய்,
ஆண் மலடு,
பித்தம்,
மூட்டு வலி,
மூலநோய்,
வயிற்றுப்போக்கு
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

Labels:
கண் பிரச்சினைகள்,
சுவாச கோளாறுகள்,
நீரிழிவு நோய்,
பாகற்காய்,
மூலநோய்
சுவாச கோளாறுகள்
பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய
பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால்
பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில்
ஏற்பட்ட பிரச்சனை தீரும்.
சொரியாஸிஸ்
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.
மூல வியாதி:
ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
கல்லீரல் பிரச்சினை
பாகற்காற்
பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு
சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான
பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
காலரா மற்றும் வாந்தி பேதி
ஆரம்ப
கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு
டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு
இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும்.
காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
இரத்த கோளாறுகள்
பாகற்காயை
ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக
உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த
மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம்
சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர
உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள்,
போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நீரிழிவு நோய் நீங்க பாகற்காய்
நீரிழிவு நோய்
பழத்த
பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை
குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில்
இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை
அதிகரிக்கிறது.
Monday, May 28, 2012
உடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை !
சித்த மருத்துவத்தில் மிகபெரிய நோய்கள்
முதல் சாதாரண நோய்கள் வரைக்கும் தீர்வதற்கு பல சித்தர்கள் வழிகாட்டி
உள்ளார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகத்திய மாமுனிகள் அவர் தமது
நூல்களில் இத்தகைய பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான
ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை
வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்
Labels:
அதிமதுரம்,
உடல் எரிச்சல்,
கருஞ்சீரகம்,
கொத்தமல்லி விதை,
சீரகம்,
சீனா கற்கண்டு
Friday, May 18, 2012
இளநரையா... முடி கொட்டுகிறதா? கவலைப்படாதீங்க லேடீஸ்
சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை பராமரிப்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். வியர்வை, வெயிலில் செல்வதால் கூந்தல் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. பலருக்கும் முடி கொட்டுகிறது. இளநரையாலும் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட லேடீசா நீங்கள். இதோ உங்களுக்காக கூந்தலை எப்படி பராமரிப்பது என்பது பற்றி சில டிப்ஸ்:
Labels:
இளநரை,
எண்ணெய் பசை,
பேரிச்சம்பழம்,
பேன் தொல்லை,
முடி கொட்டுதல்
Subscribe to:
Posts (Atom)